டிப்பர் லாரி பறிமுதல்
பேரையூர்:வி.ராமசாமிபுரம் கல்விசெல்வம் 23. ரஞ்சித் 25. ராஜாகுரு 48. ஆகிய மூவரும் பூசலபுரம் கவந்தநதியில் டிப்பர் லாரியில் மணல் திருடி கொண்டிருந்தனர். ரோந்து சென்ற சேடப்பட்டி போலீசாரை பார்த்ததும் லாரியை விட்டுவிட்டு மூவரும் தப்பி ஓடினர். போலீசார் லாரியை பறிமுதல் செய்து தப்பிவர்களை தேடி வருகின்றனர்.