மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / அக்.12
12-Oct-2025
கோயில் ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 மணி. பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. சிவபுராணம் பாராயணம்: ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி மரக்கன்றுகள் நடும் விழா: கே.என்.பி.எம். மதுரை பிள்ளைமார் சங்கம் மேல்நிலைப் பள்ளி, சம்மட்டிபுரம், மதுரை, தலைமை: பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் சண்முகவேல், காலை 9:00 மணி முதல். அனைத்து துறை மாணவர்களுக்கான பல்திறன் போட்டிகள்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, நாகமலை புதுக்கோட்டை, துவங்கி வைப்பவர்: தாளாளர் சுந்தர், காலை 9:30 மணி, பனைமர விதை நடுதல்: துவங்கி வைப்பவர்: கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, காலை 10:00 மணி. பொது 'சிற்பியும் நாமே சிற்பமும் நாமே' சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - பேராசிரியர் சந்திரன், கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், நத்தம் ரோடு, மதுரை, மாலை 5:00 மணி. மூத்த குடிமக்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.2000 வழங்க அரசை வலியுறுத்தி மனு கொடுக்கும் இயக்கம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: மாவட்ட செயலாளர் திலகர், ஏற்பாடு: மதுரை மண்டல ஓய்வூதியர் நலச் சங்கம், காலை 10:00 மணி. தமிழக அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு பெறக் காரணமான தலைமை ஆசிரியை கனகலட்சுமிக்கு பாராட்டு விழா: அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, இளமனுார், தலைமை: பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பெரியசாமி, மாலை 3:00 மணி. விளையாட்டு மாநில அளவிலான முதல்வர் கோப்பை கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள்: மதுரை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி. கண்காட்சி மாமதுரை - இயற்கை மதுரை வேளாண் விளைபொருட்கள் மதிப்புக்கூட்டிய பொருட்களுக்கான விற்பனை கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சி: இந்திரா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநகர், துவக்கி வைப்பவர்: பள்ளித் தலைவர் அரவிந்தன், ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், காலை 10:00 மணி.
12-Oct-2025