உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி /ஆக.7

இன்றைய நிகழ்ச்சி /ஆக.7

கோயில் ஆடிப்பெருந்திருவிழா 7ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை, தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி முதல், சுந்தரராஜபெருமாள் மஞ்சள் நீராட்டு புஷ்பச் சப்பரத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணிக்கு மேல், ராகமஞ்சரி குழுவின் இசைக் கச்சேரி, இரவு 7:00 மணி. 77ம் ஆண்டு பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, காளியம்மன் வீதியுலா, மாலை 4:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை. லலிதா ஸகஸ்ரநாம அர்ச்சனை: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி. குருவாரம் முன்னிட்டு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மகா பெரியவா கோயில், 13, பொன்மேனி, நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி. சித்த நவஹரி குருவின் ஆடிப்பூராட ஜெயந்தி: சித்தாஸ்ரமம், 4, மாரியம்மன், தெப்பக்குளம் மேல வீதி, மதுரை, அருளுரை: மதுரை ராமகிருஷ்ண மடத் தலைவர் நித்ய தீபானந்த மகராஜ், காலை 9:00 மணி, அன்னதானம் துவங்கி வைப்பவர்: மீராகுஞ்ச் பாலி டிரேடர் பிரபாகரன் பாபு, அன்னதானம், மதியம் 12:00 மணி முதல். பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் -- வெங்கடாசலம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. அன்னை சாரதா தேவி வாழ்க்கை வரலாறு: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. கிரியா யோகம்: நிகழ்த்துபவர் -- சுவாமி சுத்தானந்த கிரி, அருணாச்சலம் கமலாம்பாள் மகால், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. தியானமும், யோகமும்: நிகழத்துபவர் -- பிரஜாபிதா பிரம்ம குமாரிகள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. அகண்ட நாமம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:30 மணி. பள்ளி, கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்துதல் நிகழ்வு: ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர். நகர், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, மதுரை, முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்ரமணியன், காலை 11:00 மணி. மாவட்ட அளவிலான கல்லுாரி மாணவர்களுக்கான பாரதி இளங்கவிஞர் விருது கவிதைப் போட்டி: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர்(பொறுப்பு) சாந்திதேவி, துவக்கி வைப்பவர்: நான்காம் தமிழ்ச்சங்கம் செயலாளர் மாரியப்பமுரளி, காலை 10:00 மணி. காந்திய சிந்தனைக் கருத்தரங்கம்: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி, மதுரை, அருணாசலம் நினைவுரை, காந்திய சிந்தனை கல்லுாரி இயக்குநர் ஆண்டியப்பன், தலைமை: புதுடில்லி தேசிய காந்தி மியூசியம் இயக்குநர் அண்ணாமலை, துவக்கவுரை: காந்தி கிராமம் கிராமிய பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், வாழ்த்துரை: காந்தி மியூசியம் செயலாளர் நந்தாராவ், மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி முதல்வர்(பொறுப்பு) ஜார்ஜ், காலை 10:25 முதல். பொது சமயநல்லுார் கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: செயற்பொறியாளர் அலுவலகம், சமயநல்லுார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. அகில பாரத வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா: மதுரை யூனியன் கிளப், தமுக்கம், மதுரை, சிறப்பு விருந்தினர்: அகில பாரதிய ஆதிவக்த பரிஷத் தேசிய செயற்குழு உறுப்பினர் பழனிகுமார், முன்னிலை: மாநிலத் தலைவர் ராஜேஷ் சரவணன், பொதுச் செயலாளர் கேசவன், இரவு 7:00 மணி முதல். தமிழ் கூடல்: 'முத்தமிழ் கலைஞரும் சமூகநீதியும்': உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, நிகழ்த்துபவர் - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநில துணைத் தலைவர் கவிஞர் முத்துநிலவன், தலைமை: சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, காலை 11:00 மணி. ஹிந்தி மொழி பேச்சு சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன் 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்சியளிப்பவர்: காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:40 மணி. கண்காட்சி கலாஷேத்ரா கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி