உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

கோயில் 6ம் நாள் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதிகளில் தங்கச்சப்பரம், காலை 9:00 மணி, ராமநாதன், யுவராஜ் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, மாலை 5:30 மணி, கிளி வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, ஆடிப்பெருந்திருவிழா: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், மதுரை, கொடியேற்றம், காலை 9:15 முதல் 10:00 மணிக்குள், சுந்தரராஜபெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு மேல். ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேலஅனுப்பானடி, மதுரை, வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், பூக்குழி இறங்குதல், அம்மனுக்கு பாலாபிஷேகம், மதியம் 3:00 மணி, முளைப்பாரி எடுத்தல், இரவு 9:00 மணி. பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, கொடியேற்றம், காப்பு கட்டுதல், காலை 6:00 முதல் 7:00 மணி வரை. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 முதல் மதியம் 12:00 மணி வரை. ஆடி வராஹி நவராத்திரி 8ம் நாள் பூஜை: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், மேட்டுத்தெரு, பெத்தானியபுரம், ராஜ வராஹி அம்மனுக்கு அபிஷேகம், மாலை 4:00 மணி, சிறப்பு அலங்காரம், இரவு 7:45 மணி. ஆடி வெள்ளி ராஜ அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோவில், 2 யூனியன் பேங்க் காலனி 4வது தெரு, விளாங்குடி, மதுரை, இரவு 7:00 மணி. ஆடி சுவாஷினி பூஜை: காஞ்சி காமகோடி பீடம், 23, பெசன்ட்ரோடு, சொக்கிகுளம், மதுரை, நித்ய பூஜை, காலை 7:00 மணி, சுவாஷினி பூஜை, காலை 8:30 மணி, பிரசாதம் வழங்குதல், காலை 11:00 மணி. சர்வ மங்கள பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி. 108 திருவிளக்கு பூஜை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. லலிதா சகஸ்ரநாமம் ஏகதின லட்சார்ச்சனை: சிருங்கேரி சங்கர மடம், அம்மன் சன்னதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 8:30 மணி, தீபாராதனை, காலை 11:30 மணி, பிரசாதம் வழங்குதல், 12:00 மணி. பக்தி சொற்பொழிவு -சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி 'பரா, அபரா சக்தி' : நிகழ்த்துபவர் - சுவாமி தத்துவாத்மானந்தா சரஸ்வதி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை. அமைதிப் பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், 24, குமாரசாமி ராஜா தெரு, ஷெனாய்நகர், மதுரை, ஏற்பாடு: செப்சிரா, சேவாலயம் மாணவர் இல்லம், அருட்செய்தி: கார்த்திகேயன், தலைமை: செப்சிரா செயலாளர் மோகன், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. பள்ளி, கல்லுாரி மாநில அளவிலான கல்லுாரிகளுக்கிடையேயான 'டெக் மீட் 2025' : பாத்திமா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: கல்லுாரி கம்யூட்டர் சயின்ஸ் துறை, காலை 10:00 மணி * கருத்தரங்கம்: தலைமையின் மகத்துவம் - காந்திய வழியில், மதுரை காமராஜ் பல்கலை, நாகமலை புதுக்கோட்டை, நிகழ்த்துபவர் - காந்தி மியூசியம் முதல்வர் தேவதாஸ், ஏற்பாடு: பல்கலை உடற்கல்வித் துறை, காலை 11:00 மணி. பொது ஓட்டல் தமிழ்நாடு வளாகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா: ஓட்டல் தமிழ்நாடு, அழகர்கோவில் ரோடு, மதுரை, காணொளிக்காட்சி வாயிலாக திறந்து வைப்பவர்: முதல்வர் ஸ்டாலின், ஏற்பாடு: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், காலை 11:00 மணி. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்: மதுரை காந்தி என்.எம்.ஆர்., சுப்பராமன் மகளிர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: டாக்டர் சாமர்வேல் நினைவு சி.எஸ்.ஐ., மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் ஜெயராஜசேகர், தலைமை: கல்லுாரி முதல்வர் கோமதி, மதியம் 1:30 முதல் 2:30 மணி வரை. கண்காட்சி ராயல் பர்ன் லிவ்விங் எக்ஸ்போ 2025 மரச்சாமான்களுக்கான கண்காட்சி - மடீட்சியா மகால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ஸ்மார்ட் ஹோம் மரச்சாமான்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, குத்து விளக்கு ஏற்றுவோர்: எஸ்.பி.ஐ., மதுரை கோட்ட மேலாளர் மதன், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க துணைத் தலைவர் குமார், லயன்ஸ் நிர்வாகி பாண்டியராஜன், காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை