உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

இன்றைய நிகழ்ச்சிகள்: மதுரை

கோயில் 7ம் நாள் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆடி வீதிகளில் தங்கச்சப்பரம், காலை 9:00 மணி, சங்கர நாராயணன், வெங்கடேசன் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, மாலை 5:30 மணி, கிளி வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, ஆடிப்பெருந்திருவிழா 2ம் நாள்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:15 முதல் 10:00 மணிக்குள், சுந்தரராஜபெருமாள் சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், இரவு 7:00 மணிக்கு மேல். 25ம் ஆண்டு ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி ஹவுசிங்போர்டு, மதுரை, பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் செலுத்துதல், காலை 6:00 மணி முதல், அம்மனை தேர்ப்பவனியுடன் பூஞ்சோலைக்கு அனுப்புதல், மாலை 5:00 மணி. 77ம் ஆண்டு பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, அம்மனுக்கு மஞ்சள் காப்பு அபிஷேகம் கட்டுதல், மாலை 6:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, காலை 9:00 முதல் 10:30 மணி வரை. சத்சங்கம், கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், தல்லாகுளம் பெருமாள் கோயில், காலை 6:00 மணி. பக்தி சொற்பொழிவு தாயுமானவர் பாடல்கள்: நிகழ்த்துபவர் - கண்ணன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. லலிதா சகஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, பகவான் ரமணரின் சத்தர்ஸன விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை. பள்ளி, கல்லுாரி முப்பெரும் விழா- நல்லாசிரியர்கள் விருதுக்கான சாதனை பரிசுகள், அரசு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்: டி.வி.எஸ்., பள்ளி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் சீனிவாசன், தலைமை: டிரஸ்ட் இயக்குநர் ரங்கராஜன், ஏற்பாடு: சுப்ரமணிய பாரதி டிரஸ்ட், மாலை 6:00 மணி. பள்ளிகளுக்கு இடையிலான வினாடிவினா உள்ளிட்ட போட்டிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் நிர்மலா மேரி, ஏற்பாடு: இளங்கலை சிறப்பு பட்டத்துறை(ஹானர்ஸ்) காலை 8:30 முதல் மாலை 4:00 மணி வரை. மெப்கோ ஸ்லெங் மெட்ரிக் பள்ளி மற்றும் நர்சரி, பிரைமரி பள்ளி விளையாட்டு விழா: பள்ளி வளாகம், திருமங்கலம், தலைமை: தாளாளர் சிங்காரவேல், சிறப்பு விருந்தினர்: ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர், காலை 8:00 மணி. பொது மாப்பிள்ளை கணேஷ் குழுவினரின் 'அட கடவுளே' நாடகம்: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, ஏற்பாடு: சத்குரு சங்கீத சமாஜம், மாலை 6:30 மணி. புதிய பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்து பொறுப்பேற்பு: பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, ஞானஒளிவுபுரம், மதுரை, தலைமை: திருத்தந்தைக்கான இந்திய துாதர் ஜியோபோல்டோ ஜெரல்லி, மாலை 4:00 மணி. ராஜா முத்தையா செட்டியார் 121ம் பிறந்தநாள் விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: மதுரை கம்பன் கழகம் நிர்வாக இயக்குநர் சங்கர சீத்தாராமன், 2025க்கான பரிசுத்தொகை பெறுபவர்: சாரதா நம்பி ஆரூரன், ஏற்பாடு: தமிழ் இசை சங்கம், தேவார இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி, மாலை 5:30 மணி, சிறப்புரை, மாலை 6:30 மணி. 28வது எல்.ஐ.சி., பென்சனர்கள் சங்க மாநாடு: தருமபுர ஆதீன சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் கோபாலகிருஷ்ணன், காலை 9:30 மணி. சிறுபான்மை மற்றும் பிற அரசு உதவிபெறும் பள்ளிகளின் உரிமை மீட்பு நிர்வாகிகள் கூட்டம்: செயின்ட் மேரீஸ் பள்ளி, மதுரை, காலை 10:00 மணி. பணிநிறைவு மற்றும் பதவிஉயர்வுபெற்ற தலைமை ஆசிரியர்கள், பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற வைத்த தலைமையாசிரியர்களுக்கு பாராட்டு விழா: ஓட்டல் அர்ச்சனா, காளவாசல்,மதுரை, தலைமை: மாவட்ட தலைவர் மணிவண்ணன், பங்கேற்பு: கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் முனுசாமி, நிலக்கோட்டை ஒன்றிய பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் செல்வராஜ், பி.வி.பி.,கல்வி குழுமம் பண்ணை செல்வக்குமார், வைகை டெக்ஸ் சர்வீஸ் பழனிகுமார், ஏற்பாடு: தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம், காலை 10:00 மணி. பாலபுரஸ்கர் விருதாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு பாராட்டு விழா: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், அமைதிசங்கம், காலை 10:00 மணி. கண்காட்சி ராயல் பர்ன் லிவ்விங் எக்ஸ்போ 2025 - மடீட்சியா மகால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ஸ்மார்ட் ஹோம் மரச்சாமான்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. சில்க்வே நடத்தும் கைவினை சேலைக் கண்காட்சி: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !