உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

மதுரையில் இன்றும், நாளையும் போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இன்றும், நாளையும் (அக். 29, 30) போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.n லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் காலை 6:00 முதல் இரவு 10:30 மணி வரை நகருக்குள் நுழையத் தடை. விழாவிற்கு வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் தேவர் சிலை நோக்கி வரும் ரோடுகளில் செல்ல தடை.n நத்தம், அழகர்கோவில் ரோடுகளில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, அண்ணாநகர், வைகை தென்கரை ரோடு, விரகனுார் ரவுண்டானா வழியாக செல்ல வேண்டும். மாட்டுத்தாவணி, ஆவின் சந்திப்பில் இருந்து நத்தம் செல்லும் வாகனங்கள் ராஜா முத்தையா மன்றம், தாமரைத் தொட்டி சந்திப்பு வழியாக புது நத்தம் ரோட்டில் செல்ல வேண்டும்.n மாட்டுத்தாவணியில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் கே.கே.நகர் ஆர்ச், ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா, கணேஷ் தியேட்டர் சந்திப்பு வழியாக... n முனிச்சாலை சந்திப்பு, பழைய குயவர்பாளையம் ரோடு, செயின்ட் மேரீஸ் பள்ளி சந்திப்பு, தெற்குவெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும் அல்லதுn முனிச்சாலை ரோடு, அம்சவல்லி ஓட்டல் சந்திப்பு, நெல்பேட்டை, அண்ணா சிலை, யானைக்கல், வடக்கு மாரட் வீதி, வடக்கு வெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும் அல்லதுகுருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா, வைகை தென்கரை ரோடு, ஓபுளாபடித்துறை சந்திப்பில் இடப்புறம் திரும்பி சந்தை பேட்டை சந்திப்பு, முனிச்சாலை ரோடு, அம்சவல்லி சந்திப்பு, நெல்பேட்டை, அண்ணா சிலை யானைக்கல், வடக்கு மாரட் வீதி, வடக்கு வெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும் அல்லதுகுருவிக்காரன் சாலை சந்திப்பு ரவுண்டானா, வைகை தென்கரை ரோடு, யானைக்கல் சந்திப்பில் இடப்புறம் திரும்பி வடக்கு மாரட் வீதி, வடக்கு வெளி வீதி வழியாக நகருக்குள் செல்ல வேண்டும்.n வடக்கு வெளிவீதியில் இருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக வரும் வாகனங்கள் பாலம் ஸ்டேஷன் ரோடு, எம்.எம். லாட்ஜ் சந்திப்பில் இடப்புறம் திரும்பி கான்சாபுரம் ரோடு, இ2இ2 ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், கிருஷ்ணன்கோயில் திருமுக்குளம் தென்கரை வழியாக செல்ல வேண்டும்.n மேலமடை பகுதியில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி நகருக்குள் வரும் வாகனங்கள் ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை சந்திப்பு, கணேஷ் தியேட்டர் சந்திப்பு, காமராஜர் ரோடு வழியாக நகருக்குள் செல்ல வேண்டும். n பசும்பொன் செல்லும் பிற மாவட்ட வாகனங்களில் நகருக்குள் செல்ல போலீசாரால் அனுமதிக்கப்பட்ட வாகனங்களைத் தவிர இதர வாகனங்கள் நகருக்குள் வராமல் சுற்றுச்சாலை வழியாக செல்ல வேண்டும்.n கோரிப்பாளையம் தேவர் சிலை சந்திப்பிற்கு செல்ல டூ வீலர்களுக்கு அனுமதி இல்லை. டூவீலர்கள் அனைத்தும் தமுக்கம் மைதானம், அண்ணா பஸ் ஸ்டாண்ட், எம்.எம். லாட்ஜ் சந்திப்பு இடங்களில் நிறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை