உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கோரிப்பாளையத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

 கோரிப்பாளையத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரை கோரிப்பாளையம் சந்திப்பு அருகில் புதிய மேம்பாலம் கட்டுமானப் பணி நடப்பதால், தமுக்கம் சந்திப்பில் இருந்து கோரிப்பாளையம் சந்திப்பிற்கு செல்லும் இடது பக்க ரோடு மட்டும் பயன்பாட்டில் உள்ளது. எம்.எம்.லாட்ஜ் பகுதியிலிருந்து பனகல் ரோடு செல்லும் ரோட்டில் பாலம் இணைக்கும் பணி நடக்கவிருப்பதால், மேற்படி வழித்தடத்தில் சற்று வலதுபுறம் திரும்பி தேவர் சிலையை சுற்றி இடதுபுறம் திருப்பி பனகல் ரோட்டிற்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமுக்கம் சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்பு வழியாக பனகல் ரோடு செல்லும் வாகனங்கள் மேற்படி தேவர் சிலையை சுற்றி இடதுபுறம் திரும்பி செல்லலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை