உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரை: மதுரை நகரில் நடந்து வரும் மேம்பால கட்டுமான பணிகளில் தற்போது மதுரை யானைக்கல் புதுப்பாலம் இறக்கம் மற்றும் அருகே உள்ள மேளக்கார தெருவில் கான்கிரீட் உத்திரங்கள் அமைக்கும் பணி நடக்க உள்ளது.இதனால் வாகனங்களை பாதுகாப்பாக இயக்கவும், பாதசாரிகள் சிரமமின்றி சென்று வரவும் இந்த பகுதியில் போலீஸ், நெடுஞ்சாலை, மாநகராட்சி, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.அவர்கள் எடுத்த முடிவின்படி இன்று (டிச.17) முதல் பின்வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * புதுப்பாலத்தில் இருந்து பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் புதுப்பாலம் சந்திப்பில் எளிதாக செல்லும் வகையில் மூன்று பாதைகளுடன் உத்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இச்சாலையில் இடதுபுறமிருந்து முதல்பாதை வழியாக பஸ், கனரக வாகனங்கள் செல்லும் வகையிலும், 2வது பாதையில் கார், ஆட்டோக்கள் செல்லும் வகையிலும், 3வது பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையிலும் திட்டமிடப்பட்டு வழிவகை செய்யப்பட்டுள்ளது. * ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் இருந்து மாட்டுத்தாவணி செல்லும் வெளியூர் பஸ்கள் அனைத்தும் தத்தனேரி பாலம், செல்லுார் கபடி ரவுண்டானா, வைகை வடகரை சாலை, ஆசாரிதோப்பு சந்திப்பு, ஆவின்சந்திப்பு, கே.கே.நகர் ஆர்ச் சந்திப்பு வழியாக செல்லலாம்.* அவசர கால ஊர்திகளான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் வழக்கம்போல செல்லலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !