உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழைய வேகத்தில் போடி ரயில்

பழைய வேகத்தில் போடி ரயில்

மதுரை; மதுரை - - போடிநாயக்கனுார் ரயில் பாதையின் சில இடங்களில் அனுமதி இல்லாமல் இருசக்கர வாகனங்கள் கடப்பதை தவிர்க்கும் வகையில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை குடியிருப்பு பகுதி முத்துப்பட்டி அருகே ரயில் பாதையை அனுமதி இல்லாமல் வாகனங்கள் கடந்து வந்ததால் ரயில்கள் 30 கி.மீ., வேகத்தில் சென்று வந்தன. தற்போது ரயில் பாதையின் இருபுறமும் 130 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் 110 கி.மீ., வேகத்தில் ரயில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுமதி இல்லாத இடங்களில் ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி