உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

திருமங்கலம் : திருமங்கலம் அரசு கல்லுாரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பாக மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். சங்க ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு வரவேற்றார். செயலாளர் ராஜ்குமார் பேரிடர் மேலாண்மை காலத்தின் செயல்முறைகள் குறித்து பயிற்சி வழங்கினார். இளைஞர் செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ரிஜின், மதுரை முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பட்டினத்தார், காமராஜர் பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சிந்துஜா, விருதுநகர் செந்திக்குமார கல்லுாரி பேராசிரியர் ரமேஷ்குமார், சங்க ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை