மேலும் செய்திகள்
ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
23-Oct-2024
மதுரை: மதுரையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, திருமங்கலம் கிரீன் டிரஸ்ட் சார்பில் பசுமைப்படை ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்களுக்கான பயிற்சி முகாம் சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.மாசு கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் துவக்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் வரவேற்றார். தலைமையாசிரியர் ஜோதிகுமார், மடீட்சியா துணை இயக்குனர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். சிறுதானிய உணவு, காகிதப் பை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. 150 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
23-Oct-2024