உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டாரம் விராதனுாரில் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு அங்கக சான்றளிப்பு, விளை நிலம் காப்போம் பயிற்சி முகாம் நடந்தது. அங்ககச் சான்று நடைமுறை பற்றி விதைச்சான்று அலுவலர் நித்யா, விளைநிலம் காத்தல் குறித்து வேளாண்மை கல்லுாரி பேராசிரியர் சரவணன், மண் பரிசோதனை முடிவின் அடிப்படையில் ரசாயன உரங்களை பயன்படுத்துவது குறித்துவேளாண் அலுவலர் அருள் நவமணி விஜய பாரதி பேசினர். இயற்கை முறையில் வேளாண்மை மற்றும் பூமித்தாயை காப்போம் என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் மீனாட்சி சுந்தரம், பயிர் காப்பீடு மற்றும் பி.எம். கிசான் திட்டம் குறித்து துணை வேளாண் அலுவலர் அழகேசன், மண்புழு உரம் தயாரிப்பது குறித்து வேளாண் மாணவி கயல்விழி பேசினர். தொழில்நுட்ப மேலாளர் லதா, உதவி மேலாளர்கள் அழகர், மகாலட்சுமி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ