உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / படவரைவாளர்களுக்கு இடையபட்டியில் பயிற்சி

படவரைவாளர்களுக்கு இடையபட்டியில் பயிற்சி

மதுரை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உதவிப்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், படவரைவாளர், பணிமேற்பார்வையாளர், பணி ஆய்வர், துப்புரவு ஆய்வர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 2538 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் பணி நியமன ஆணை வழங்கினார். மதுரை மாவட்டத்தில் 117 படவரைவாளர், 162 பணிமேற்பார்வையாளர் என மொத்தம் 279 பேருக்கு இடையபட்டியில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் பயிற்சி வகுப்பு நேற்று துவங்கியது. அதனை கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை பொறியாளர் பாபு, துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன், நகராட்சி நிர்வாக இயக்குனர் முருகேசன், உதவி இயக்குனர் மணிகண்டன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சாலிதளபதி, மகேஸ்வரன், செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை