மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி
23-Jun-2025
மதுரை: மதுரையில் மாற்றுத் திறனாளிகள் 210 பேருக்கு தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் நுண்களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.கே.புதுார் ஜவஹர்புரம் டான்பாஸ்கோ பள்ளியில் இப்பயிற்சியை கலெக்டர் பிரவீன்குமார் துவக்கி வைத்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுவாமிநாதன், தொழில்வழிகாட்டு அலுவலர் வெங்கட்சுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புக்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று நாள் பயிற்சிக்குப் பின் மாவட்ட அளவில் வீடுவீடாகச் சென்று அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த உள்ளனர். இதில் அடையாளம் காணப்படுவோருக்கு அடையாள அட்டை வழங்கி, அவர்கள் பகுதியில் சேவை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக விரைவில் கிராம அளவில் 21 மையங்கள் திறக்கப்பட உள்ளன. இம்மையங்களில் சிறப்பு ஆசிரியர், தசைப்பயிற்சியாளர், ஒருங்கிணைப்பாளர் உட்பட தேவையானோர் நியமிக்கப்படுவர். இதன் மூலம் கடைக்கோடி அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு சமூக, பராமரிப்பு சேவை கிடைக்கும் என அலுவலர்கள் கூறினர்.
23-Jun-2025