சீரற்ற இதய துடிப்பை கட்டுப்படுத்த வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை
மதுரை : தென் தமிழகத்தில் முதன்முதலில் சீரற்றவேகமான இதய துடிப்பை கட்டுப்படுத்த 'கிரையோ அப்லேஷன்' செயல்முறை சிகிச்சை மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதயவியல் மற்றும் கேத் லேப் ஆய்வகங்களின் இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் கூறியதாவது:வேகமான இதயத்துடிப்பை ஏற்படுத்தும்'ஏட்ரியல் பைப்ரிலேஷன்' எனப்படும் ஒருவகை 'அரித்மியா' பாதித்த நோயாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சையே 'கிரையோ அப்லேஷன்'. இது குணமடையும் நேரத்தை குறைக்கிறது. இது மின் இயற்பியல் துறையில் ஒரு திருப்புமுனை.அடிக்கடி இதயம்வேகமாக துடித்தல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இதயத்தின் மேல் அறைகளில் பாதிப்பு இருக்கலாம். இச்சீரற்ற இதய துடிப்பு உடலின் பிற பாகங்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் இதய செயலிழப்பு, பக்கவாதம் ஏற்பட வாய்ப்புஉள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவது அவசியம்.அதிவேக இதயத் துடிப்பை ஏற்படுத்தும் செல்களை (ஏட்ரியல் பைப்ரிலேஷன்) குறிவைத்து இதயத்தின் இயல்பான துடிப்பை மீட்டெடுக்கஉதவுவதே 'கிரையோ அப்லேஷன்' செயல்முறை.இதில் மெல்லியநெகிழ்வான குழாய் (கிரையோ பலுான்) செலுத்தப்பட்டு பிரச்னைக்குரிய செல்களை அடையாளம் கண்ட பின், ஒழுங்கற்ற இதய துடிப்புக்கு காரணமான செல்களை உறைய வைக்கிறது. இது பாதுகாப்பான செயல்முறை. இச்சிகிச்சை முடிந்தபின் மறுநாள் நோயாளிகள் வீடு திரும்பலாம் என்றார்.