உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மரக்கன்று நடும் பணிகள் தீவிரம்

மரக்கன்று நடும் பணிகள் தீவிரம்

மதுரை: தமிழகத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஒன்றியங்களில் மழைக்காலத்தை பயன்படுத்தி மரக்கன்றுகளை நடவேண்டும் என கூடுதல் தலைமை செயலர் ககன்தீப்சிங்பேடி உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து அனைத்து ஒன்றியங்களிலும் இப்பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள்ளன. இவை மூலம் மாவட்ட அளவில் 3.5 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சில நாட்களுக்கு முன் மதுரை மேற்கு ஒன்றிய பகுதியில் கலெக்டர் பிரவீன்குமார் மரக்கன்றுகளை நட்டார். இதன் தொடர்ச்சியாக தற்போது இப்பணி தீவிரமடைந்துள்ளது. ஏற்பாடுகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்த், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்கள் செய்துள்ளனர். இதேபோல மாஸ் கிளீனிங் என ஒட்டுமொத்தமாக துாய்மைப் பணியாளர்களை குவித்து ஊராட்சிகளை துாய்மைப்படுத்தும் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை