உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்

 டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை ரயில்வே காலனியில் டி.ஆர்.இ.யூ., தொழிற்சங்கம் சார்பில் ஓபன்லைன் பிரிவு செயலாளர் சேதுக்கரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு தன்னிச்சையாக அமல்படுத்திய நான்கு தொகுப்பு சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியர்களை பிரிக்கும் 2025 நிதி மசோதா சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். சி.ஐ.டி.யூ., மாவட்ட செயலாளர் லெனின், டி.ஆர்.பி.யூ., கோட்ட செயலாளர் சங்கர நாராயணன், டி.ஆர்.இ.யூ., கோட்டபொருளாளர் சரவணன், உதவிக் கோட்ட தலைவர் ஜெயராஜசேகர், உதவிக் கோட்ட செயலாளர் காட்டுராஜா,பொதுக்கிளை உதவிச்செயலாளர் லட்சுமணசாமி, பொருளாளர் ஹரிக்குமார், துணை பொதுச் செயலாளர்கள் திருமலை அய்யப்பன், சிவக்குமார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !