உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு

டங்ஸ்டன் திட்ட எதிர்ப்பு

மேலுார் : அழகர்கோவிலில் நேற்று அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, கிடாரிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டனர். வேதாந்தாவின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனை நடத்தினர்.விவசாயத்தை பாதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். போராடும் மக்களுக்கு மாநில அரசு துணை நின்று டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பேசினர். இன்று (நவ.27) அ.வல்லாளபட்டியில் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்தனர். நாளை மறுநாள் மேலுாரில் முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாய சங்கம் மற்றும் அனைத்து சங்கத்தினர் நடத்தும் கடையடைப்பு, ஆர்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி