உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / துாத்துக்குடி- -பெங்களூரு கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்

துாத்துக்குடி- -பெங்களூரு கிறிஸ்துமஸ் சிறப்பு ரயில்

மதுரை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு துாத்துக்குடி - பெங்களூரு இடையே மதுரை வழியாக சிறப்பு ரயில்களை தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நேற்று (டிச. 20) காலை 9:55 மணிக்கு கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் (07361) இன்று (டிச. 21) காலை 7:02 மணிக்கு திண்டுக்கல், 8:15 மணிக்கு மதுரை, 8:53 மணிக்கு விருதுநகர், 9:30 மணிக்கு கோவில்பட்டி வழியாக காலை 11:00 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது.மறுமார்க்கத்தில் இன்று மதியம் 1:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07362) மதியம் 1:58 மணிக்கு கோவில்பட்டி, 2:38 மணிக்கு விருதுநகர், 3:55 மணிக்கு மதுரை, மாலை 5:05 மணிக்கு திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை அதிகாலை 3:00 மணிக்கு எஸ்.எம்.வி.டி., பெங்களூரு செல்கிறது.இதில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.கடைசி நேரத்தில் இப்படி கிறிஸ்துமஸ் சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் முன்பதிவு செய்து செல்லும் பயணிகளுக்கு எந்த பலனும் இல்லை என்பதை ரயில்வே நிர்வாகம் அறியுமா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை