உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

வெவ்வேறு விபத்தில் இருவர் பலி

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா சிவரக்கோட்டையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ராமகிருஷ்ணன் 43, இரண்டு நாட்களுக்கு முன் சிவரக்கோட்டை அருகே 4 வழிச்சாலையில் நடந்து சென்றார். அவர் மீது மதுரையில் இருந்து விருதுநகர் சென்ற டூவீலர் மோதியது. காயமடைந்த ராமகிருஷ்ணன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலியானார். டூ வீலரை ஓட்டி வந்த கள்ளிக்குடி மணிநகர் நாகராஜனிடம் போலீசார் விசாரிக்கின்றனர். வாடிப்பட்டி: சோழவந்தான் பகுதி வீரமலை மகன் பொன்ராஜ் 23. மதுரை நகைக்கடை ஊழியர். நேற்று காலை அதே பகுதி ஜானகிராமனுடன் 33, டூவீலரில் மதுரைக்கு சென்றார். கீழமாத்துார் தனியார் பள்ளி அருகே வேகத்தடையில் தடுமாறி இருவரும் விழுந்தனர். அப்போது மேலக்கால் நோக்கி சென்ற 'செப்டிக் டேங்க்' லாரி மோதியதில் பொன்ராஜ் இறந்தார். ஜானகிராமன் காயமடைந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை