த.வெ.க. மாநாட்டிற்கு வந்த இருவர் மரணம்
மதுரை; மதுரை த.வெ.க., மாநாட்டுக்கு வந்த இரண்டு பேர் மாரடைப்பால் இறந்தனர். சென்னையைச் சேர்ந்த பிரபாகரன், 33. நண்பர்களுடன் மதுரை த.வெ.க., மாநாட்டுக்கு வேனில் வந்தார். மதுரை சக்கிமங்கலம் அருகே நேற்று காலை வந்த போது சிறுநீர் கழிக்க, திறந்த வெளியில் சென்றார். நீண்ட நேரமாகியும் வராததால் நண்பர்கள் தேடி சென்றனர். பிரபாகரன் மயங்கிய நிலையில் கிடந்தார். மதுரை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற போது, அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதேபோல், நீலகிரியில் இருந்து மாநாட்டிற்கு வந்த ரோஷனுக்கு 18, மாநாடு திடலில் மூச்சு திணறல் ஏற்பட்டு முதலுதவி செய்யப்பட்டது. தொடர்ந்து, சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தபோது மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.