உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு பஸ் கண்ணாடியை உடைத்த  இருவருக்கு 2 ஆண்டு சிறை

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த  இருவருக்கு 2 ஆண்டு சிறை

மதுரை : அரசு பஸ் கண்ணாடியை உடைத்த இருவருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2012ல் கன்னியாகுமரி குலசேகரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் சென்றது. இரவு 11:30 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி வந்தபோது டூவீலரில் வந்த 3 பேர் பஸ் கண்ணாடியை உடைத்தனர். அதில் டிரைவர் தமிழழகன் காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து புதுார் போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் 35, ரூபன் 42, மதன்குமார் 32 ஆகியோரை கைது செய்தனர். மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தநிலையில் மதன்குமார் இறந்தார். மற்ற இருவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜரானார். இருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனை, தலா ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டார். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் வெவ்வேறு வழக்குகளில் ஏற்கனவே சிறையில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை