டூவீலரில் சென்றவர் மரத்தில் மோதி பலி
பேரையூர் : விருதுநகர் மாவட்டம் சுரைக்காய்பட்டி சதுரகிரி 30. இவர் பேரையூர் தாலுகா டி. கிருஷ்ணாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்று விட்டு ஊருக்கு திரும்பினார். வண்டப்புலி அருகே வந்தபோது டூவீலர் நிலை தடுமாறி ரோடு ஓரத்தில் இருந்த மரத்தில் மோதி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.