உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / 8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது

திருநகர்: திருநகர் போலீசார் பாலாஜி நகர் தென்கால் கண்மாய் கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் அப்பகுதியில் இருந்த 2 பேர் ஓடினர். போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர்கள் திருப்பரங்குன்றம் ராஜிவ் காந்தி நகர் பரத் 21, தென்பரங்குன்றம் ஹரிஹரன் 19, என தெரிந்தது. அவர்கள் வந்த டூவீலரில் 8 கிலோ கஞ்சா இருந்ததும் தெரிந்தது. கஞ்சா, டூ வீலரை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை