மேலும் செய்திகள்
தனியார் நிலத்தை பறிக்க முடியாது!: கோர்ட் குட்டு
06-Nov-2024
மதுரை: ''அரசு திட்டங்களுக்கு தனியார் நிலம் எடுப்பு பணியில் தி.மு.க., அரசு தடுமாறுகிறது'' என சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கூறினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: மக்களுக்கான அரசு திட்டங்களை செயல்படுத்தும் போது சாலை பணிகள் என்றாலும், புதிய கட்டடங்கள், புதிய வளர்ச்சி திட்டங்கள் என்றாலும் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் போது தி.மு.க., அரசு சரியாக கடைபிடிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பழனிசாமி முதல்வராக இருந்தபோது குலசேகர பட்டினத்தில் ராக்கெட் தளம் அமைக்க 2500 ஏக்கருக்கு மேலே நிலம் கையகப்படுத்தப்பட்டது. 11 மருத்துவக்கல்லுாரிகள், 6 கலெக்டர் அலுவலகங்களுக்கும் இடம் தேர்வு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டது.ஆனால் இன்று சென்னை பரந்துாரில் அமையவுள்ள விமான நிலையத்திற்கு எதிராக 9 முறை தீர்மானம் நிறைவேற்றிய ஊராட்சி துணைத் தலைவர் திவ்யா தற்கொலை என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமான நிலைய ரன்வேக்கு நிலம் எடுப்பதில் உரிய நிவாரணம், வாழ்வாதாரத்திற்கு உரிய நிலத்தை அரசு வழங்க வேண்டும் என மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு மக்கள் போராடினர். பழனிசாமி ஆட்சியில் இந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலங்களை கையகப்படுத்தாமல் மாற்று திட்டம் செயல்படுத்தப்பட்டது. குறிப்பாக அண்டர் பாஸ் திட்டமான விமான ஓடுதளத்தை விரிவாக்கம் செய்வதற்கு முன்மாதிரியாக அந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் தி.மு.க., அரசு திடீரென்று இது பழனிசாமி கொண்டு வந்த திட்டம் என்பதால் 9 கி.மீ., சுற்றி வரும் திட்டத்தை செயல்படுத்துகிறது. தி.மு.க., அரசு மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
06-Nov-2024