உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தாக்குதலால் பயமில்லை உதயகுமார் உறுதி

தாக்குதலால் பயமில்லை உதயகுமார் உறுதி

மதுரை : மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே மங்கல்ரேவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு, கட்சியினருடன் உதயகுமார் வந்த போது அ.ம.மு.க.,வினர் தாக்குதல் நடத்தினர். இதில் மூவர் காயமுற்றனர்.மதுரை எஸ்.பி., அரவிந்த்திடம், உதயகுமார் நேற்று புகார் மனு அளித்தார்.பின் அவர் கூறுகையில், ''அ.ம.மு.க., -- ஓ.பி.எஸ்., தரப்பில் இருந்து தொடர் மிரட்டல் வருகிறது. அச்சுறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை,'' என்றார்.இதற்கிடையே, தாக்குதல் நடத்தியதாக சேடப்பட்டி தெற்கு ஒன்றிய அ.ம.மு.க., செயலர் பழனிசாமி கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி