உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க., தோற்காது உதயகுமார் உறுதி

இரட்டை இலை இருக்கும் வரை அ.தி.மு.க., தோற்காது உதயகுமார் உறுதி

உசிலம்பட்டி: ''இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை, உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க., மலரும்'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் பேசினார். உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட அ.தி.மு.க, பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் உதயகுமார் தலைமையில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், தவசி, எஸ்.எஸ். சரவணன், நகர் செயலாளர் பூமாராஜா, ஜெ. பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜன், மாணவரணிச் செயலாளர் மகேந்திரபாண்டி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதயகுமார் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின் பதட்டத்தில் இருக்கிறார். இப்போது எஸ்.ஐ.ஆரை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் சென்றிருக்கிறார். நவ. 11ல் தி.மு.க., போராட்டம் நடத்துகிறது. ஆனால் மாவட்டச் செயலாளர்கள் எல்லோரும் ஓட்டுச்சாவடியில் நிற்கின்றனர். பொண்ணு பிடிக்கவில்லை என்கின்றனர். ஆனால் தாலியை கட்ட வேண்டும் என்கிறார்கள். ஒன்றும் புரியவில்லை. அ.தி.மு.க., பிரிந்து கிடக்கிறது. அவர் போய்விட்டார், இவர் போய்விட்டார் என புரளியை கிளப்பி விட்டிருக்கின்றனர். எவர் போனால் என்ன, இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை, உண்மை தொண்டர்கள் இருக்கும் வரை அ.தி.மு.க., மலரும். 1972 ல், இருந்து அ.தி.மு.க.வில் சேர்ந்தவர்கள் இந்த கட்சியில் இருக்கிறார்கள். தி.மு.க.,வில் இருக்கும் 16 அமைச்சர்களும் அ.தி.மு.க.,விலிருந்து போனவர்கள் தான். பழனிசாமி கருத்துக்கணிப்பு எடுத்துள்ளார். அதில் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியில் 8 தொகுதியில் அ.தி.மு.க., வெற்றி பெறுவது உறுதி. 2 தொகுதி தான் அதையும் வெல்ல பழனிசாமி வியூகம் வகுத்து கொடுப்பார் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ