மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு ஆறுதலாகக்கூட பொங்கல் பரிசு இல்லை
05-Jan-2025
மதுரை : ''பழனிசாமி ஆட்சியில் ரூ.2500 பொங்கல் பரிசு வழங்கிய போது ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அரசியல் செய்த ஸ்டாலின் இன்றைக்கு அவியல் செய்கிறாரா, அரசியல் செய்கிறாரா'' என சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.மதுரையில் நேற்று அவர் கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் பரிசு மக்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. பழனிசாமி ஆட்சியின்போது ரூ.2500 வழங்கப்பட்டது. அன்றைக்கு ஸ்டாலின் ரூ. 5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் இன்று மக்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கக்கூட அவருக்கு மனமில்லை. தி.மு.க., அரசு அறிவித்த பொங்கல் பரிசிற்கு மக்களிடத்தில் வரவேற்பு இல்லை. மகிழ்ச்சியும் இல்லை.இன்றைக்கு பருவமழை காலத்தில் விவசாயிகள், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் கூட பொங்கல் பரிசை தி.மு.க., அரசு வழங்கவில்லை. பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை பொதுவிநியோக திட்டத்தில் கொடுத்தார்கள். தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். மாதம் மாதம் 20 கிலோ அரிசி தரமாக வழங்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு தரமின்றி வழங்குவதை மக்கள் வேதனையோடு பார்க்கிறார்கள்.பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே துறையில் கொண்டுவரப்படும். சர்க்கரை அளவு உயர்த்தப்பட்டு மாதம் ஒரு கிலோ கூடுதலாக சர்க்கரை வழங்கப்படும் என்று சொன்னதை செய்தார்களா. பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி,சேலை கூட தாமதமாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு கொடுப்பீர்களா, கொடுக்க மாட்டீர்களா என்பது மக்கள் கேள்வியாக உள்ளது.கடந்தாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படவில்லை. பழனிசாமி சுட்டிக்காட்டிய பின்புதான் சேர்க்கப்பட்டது. திட்டங்களை அறிவித்ததும் அதற்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராடும் போது அடிபணிந்து அதை திரும்பப் பெறுவதுமாக தி.மு.க., ஆட்சியில் தொடர்கிறது. இவ்வாறு கூறினார்.
05-Jan-2025