உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளை கொச்சைப்படுத்தும் உதயநிதி

விவசாயிகளை கொச்சைப்படுத்தும் உதயநிதி

மதுரை: ''டெல்டா பகுதி நெல் கொள்முதலில் துணை முதல்வர் உதயநிதி, விவசாயிகளை கொச்சைப் படுத்தும் விதமாக கருத்துக்களை சொல்லி உண்மையான பாதிப்பை மூடி மறைக்க நினைக்கிறார்,'' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: மேட்டூர் அணை, கல் லணையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், 5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நெல் சாகுபடியை நம்பிக்கையோடு மேற்கொள்ளலாம் என்றார். அதனாலேயே டெல்டா மாவட்டங்களில் வர லாற்றில் இல்லாத அளவு 6.31 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. திட்டமிடல் இல்லை ஆட்சியாளர்களுக்கு இசைவான வகையில் செயல்படாத தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர்கள் 5 பேரை, ஜனவரி முதல் அடுத்தடுத்து இடமாற்றம் செய்தது தான் பிரச்னைக்கு மூலகாரணம். இதனால் சாக்கு வாங்குவது, மையம் திறப்பது, ஆட்களை நியமிப்பது என திட்ட மிடல் பணிகளை தொடர முடியாமல், ஒரு லட்சம் ஏக்கர் வரையான நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. திறந்தவெளி கிடங்குகளை திறந்து விட்டோம் என்று அரசு சொன்னாலும் சுமைதுாக்கும் தொழிலாளர்கள் இல்லை. லாரிகள் சென்று வரும் வகையில் தரமான ரோடுகள் இல்லை. திட்டமிடலில் ஏற்பட்ட குளறுபடியே பாதிப்புக்கு காரணம். பழைய நெல் தான் ஏற்கனவே ஜனவரியில் கொள்முதல் செய்த நெல் மூடைகளைத் தான் தீபாவளி வரையிலும் ரயில் வேகன்களில் வெளிமாவட்டத்திற்கு அனுப்பி வைத்தனர். அக்.,1ல் இருந்து அறுவடை செய்த நெல்லை இப்போது தான் கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். தீபாவளிக்குப் பிறகே, இப்போது கொள்முதல் செய்த குறுவை நெல்லை ரயிலில் அனுப்புகின்றனர். அரவை மில்லுக்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. தமிழக அரசே காரணம் டெல்டா பகுதி களில் அக். 15 வரை மழையில்லாததால் நெல்லை அறுவடை செய்து மையத்தின் வாசல்களில் வைத்து விட்டோம். அக். 16 க்கு பிறகு கொள்முதல் செய்ய ஆரம்பித்தபோதே மழையும் தொடங்கியது. கொள்முதலுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை என காரணம் காட்ட முடியாது. அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் வாய்மொழியாக முன்அனுமதியும் அதன்பிறகு மத்திய அரசின் பின்அனுமதி வாங்கப்பட்டது. இதை செய்ய தவறிவிட்டது தமிழக அரசு. நெல் கொள்முதல் செய்வதில் தமிழகஅரசு தோல்வியை சந்தித்து விவசாயிகளை துயரத்திற்கு தள்ளியது. நெல் கொள்முதல் பாதிப்புக்கு தமிழக அரசு தான் காரணம். கொச்சைப்படுத்துவதா டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விவசாயி களின் பாதிப்பு குறித்துதான் பேசினார். அரசியல் பேசவில்லை. மறுநாள் தஞ்சை வந்த துணை முதல்வர் உதயநிதி, ரயில் வேகன்களில் நெல் மூடைகள் ஏற்றுவதைப் பார்த்து விட்டு 'எந்த மைய வாசலிலும் நெல் கொட்டி வைக்கவில்லை. மையத்தில் தடையின்றி கொள்முதல் செய்யப்படுகிறது, நெல் முளைக்கவில்லை' என்றார். தஞ்சை ஒரத்தநாடு பின்னையூரில் 50ஆயிரம் மூடை அளவிற்கு நெல் மையத்தின் வெளியே கொட்டப்பட்டுள்ளது. கொள்முதல் செய்த 40ஆயிரம் மூடைகள் இருப்பு உள்ளது. இன்னும் 50 சதவீத அறுவடை உள்ளது. உண்மைக்கு மாறாக பேசிய உதயநிதி, விவசாயிகளுக்கு நம்பகத் தன்மையாக நடந்து கொள்ளவில்லை. விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்துக்களை சொல்லி உண்மையான பாதிப்பை மூடி மறைக்க நினைக் கிறார். இந்தப் போக்கை மாற்றிக் கொண்டு விவசாயிகளின் நம்பிக்கையை பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி