உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உதினிப்பட்டியில் பாதாளம்: ரோட்டை கடக்க மக்கள் அச்சம்

உதினிப்பட்டியில் பாதாளம்: ரோட்டை கடக்க மக்கள் அச்சம்

கொட்டாம்பட்டி: சொக்கலிங்கபுரம் ஊராட்சி உதினி பட்டியில் செயல்படாத குவாரி அருகே ரோடு உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.இங்கு 10 ஏக்கருக்கு மேல் அரசின் சிடாமுனி குவாரி உள்ளது. இதன் அருகே கொட்டாம்பட்டியில் இருந்து பொட்டகளம், களத்து வீடு பகுதிகளுக்கு ரோடு செல்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலை அமைக்க பள்ளம் தோண்டி உடைகல் எடுக்கப்பட்டது. பள்ளத்தை மூடாததால் 200 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது.விவசாய சங்க நிர்வாகி அருண்: ரோடு சரியில்லாததாலும், குவாரி அருகே செல்லும்போதும் பள்ளத்தை பார்த்ததும் மக்கள் பயப்படுகின்றனர். மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு பாதுகாப்பில்லை. இவ்வழியேதான் நிலங்களுக்கு இடுபொருட்களை கொண்டு செல்கிறோம். வேலி அமைக்க கோரி அதிகாரியிடம் மனு கொடுத்தும் பலனில்லை. குவாரி பள்ளத்தில் விழுந்து உயிர் பலி ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை