உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரிட்டாபட்டியில் ஒன்றிய மாநாடு

அரிட்டாபட்டியில் ஒன்றிய மாநாடு

மேலுார்: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய மாநாடு அரிட்டாபட்டியில் நடந்தது. கிளைத் தலைவர்கள் மகாதேவன், ஜோதிபாசு தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் கருப்பசாமி துவக்கி வைத்தார். பொருளாளர் பால கிருஷ்ணன், செயலாளர் தமிழரசன் பேசினர். புதிய தலைவராக மகாதேவன், செயலாளராக ஜோதிபாசு, பொருளாளராக ரகுராம் மற்றும் 12 பேர் கொண்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரிட்டாபட்டியில் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுவது, பெருமாள் பட்டியில் தெருவிளக்கு, புதிதாக கால்நடை மருத்துவமனை அமைப்பது, 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளைச் செயலாளர் நீரேஸ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை