உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலை பாட்மின்டன் போட்டி

பல்கலை பாட்மின்டன் போட்டி

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான ஆடவர் பிரிவு பாட்மின்டன் போட்டியில் 8வது முறையாக அமெரிக்கன் கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது.மண்டல அளவில் ஏற்கனவே வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லுாரி, சவுராஷ்டிரா கல்லுாரி, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி, விருதுநகர் அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரிகள் சாம்பியன் போட்டியில் பங்கேற்றன. லீக் முறையில் நடந்த போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லுாரி வில்சன் நினைவுக் கோப்பையை வென்றது.ஜி.டி.என். கல்லுாரி 2ம் இடம், சவுராஷ்டிரா கல்லுாரி 3ம் இடம், அய்யநாடார் கல்லுாரி 4ம் இடம் பெற்றன. முதலிடம் பெற்ற மாணவர்களை முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், துணை முதல்வர் மார்டின் டேவிட், நிதி காப்பாளர் பியூலா ரூபிகமலம், உடற்கல்வி துறைத்தலைவர் பாலகிருஷ்ணன், இயக்குநர் (பொறுப்பு) நிர்மல் சிங், பல்கலை உடற்கல்வி துறைத்தலைவர் ரமேஷ் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ