உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பராமரிப்பு இல்லா சுகாதார வளாகம்

 பராமரிப்பு இல்லா சுகாதார வளாகம்

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் பேரூராட்சியில் பராமரிக்காத சுகாதார வளாகத்தால் அப்பகுதியினர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர், இப்பேரூராட்சியில் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள காவலர் தெருவில் ரூ.13 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை பேரூராட்சி, கல்லணை ஊராட்சி மக்கள் பயன்படுத்தினர். காலப்போக்கில் பராமரிப்பின்றி விடப்பட்டது. புளிய மரங்களுக்கு கீழ் இருந்த வளாகம் கஞ்சா, மது குடிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொலையும் நடந்ததால், சுகாதார வளாகம் பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே இப்பகுதி மக்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். சுகாதாரம் பாதிக்கிறது. தற்போது கழிவுநீர் மறுசுழற்சி மைய பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன. சுகாதார வளாகத்தை பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை