மேலும் செய்திகள்
58 கால்வாயில் தண்ணீர் தேனி எம்.பி., உறுதி
28-Oct-2025
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து திருமங்கலம் செல்லும் ரோடு 31 கி.மீ., நீளமுள்ளது. உசிலம்பட்டி தி.விலக்கு பகுதியில் இருந்து தும்மக்குண்டு வரை செல்லும் ரோட்டின் இரு புறங்களிலும் செடிகள் முளைத்துள்ளதால் எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் விலக முடியாத நிலை ஏற்படுகிறது. நடந்து செல்வோர், கால்நடைகளை கொண்டு செல்வோர் ரோட்டில் தான் செல்லும் நிலை பல இடங்களில் உள்ளது. டூவீலரில் செல்வோரும் வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிட முடியாமல் போகிறது. ரோட்டின் இருபுறமும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
28-Oct-2025