உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / யூரியா, பிற உரங்கள் இருப்பு உள்ளன: வேளாண் இணை இயக்குநர் தகவல்

யூரியா, பிற உரங்கள் இருப்பு உள்ளன: வேளாண் இணை இயக்குநர் தகவல்

மதுரை: மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான அளவு யூரியா, பிற உரங்கள் இருப்பு இருப்பதாக வேளாண் இணை இயக்குநர் முருகேசன் தெரிவித்தார். வாடிப்பட்டி பகுதியில் யூரியா உரத்திற்கு தட்டுப்பாடு என செய்தி வெளியான நிலையில் இணை இயக்குநர் முருகேசன், உரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் பரமேஸ்வரன் ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் முருகேசன் கூறியதாவது: வாடிப்பட்டி மட்டுமல்ல மாவட்டத்தில் உள்ள 174 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தனியார் உரக் கடைகளில் 1900 டன் அளவு யூரியா உரம் இருப்பில் உள்ளது. இந்த வார இறுதியில் துாத்துக்குடியில் இருந்து 100 டன் ஸ்பிக் யூரியா, சூரத்தில் இருந்து 500 டன் கிரிப்கோ யூரியா இறக்கப்படும். மேலும் டி.ஏ.பி., 1022 டன், பொட்டாஷ் 728 டன், காம்ப்ளக்ஸ் 3400 டன், சூப்பர் பாஸ்பேட் 600 டன் உரங்கள் இருப்பில் உள்ளது. மேலும் செப்.,15 ல் மேலுார், திருமங்கலத்திற்கான முதல்போக சாகுபடிக்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அதற்காக 2000 டன் யூரியா பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ