உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த வி.ஏ.ஓ.,க்கள் எதிர்ப்பு தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வலியுறுத்தல்

மதுரை: தொழில்நுட்ப உபகரணங்களை வழங்காமல் டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி, ராஜன்சேதுபதி கூறியிருப்பதாவது: மத்திய அரசால் அறிமுகப்படுத்தி, மாநில அரசால் செயல்படுத்த இருக்கும் டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்திற்கு எவ்வித தொழில்நுட்ப உபகரணங்களையும் வழங்காமல், முழுமையாக கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) மூலமாகவே செயல்படுத்த நினைக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம்.பிற மாநிலங்களில் இத்திட்டத்திற்காக நிதிஒதுக்கீடு செய்து, உபகரணங்கள் வழங்கி, சிறப்பு ஊழியர்களை நியமித்து பணிமுழுவீச்சில் நடக்கிறது. ஆனால் தமிழக அரசு மட்டும் எவ்வித நிதிஒதுக்காமல், பணியை துவக்க நினைப்பது ஊழியர் நலனுக்கு எதிரானது.உயர் அலுவலர்களின் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள், தாலுகாக்களை பிரிக்க நினைக்கும் தமிழக அரசு, மக்கள் தொகை பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், பரப்பளவில் அதிகமாக உள்ள கிராமங்களை பிரித்து, புதிய வி.ஏ.ஓ., பணியிடங்களை உருவாக்குவதில் முனைப்பு காட்டாதது வருத்தத்திற்குரியது.பணிப்பளுவில் பரிதவிக்கும் வி.ஏ.ஓ.,க்கள் மீது, தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்காமல் இப்பணியை திணிப்பது நடைமுறை சிக்கல்களை உருவாக்கும். இப்பணியை செய்ய இயலாது எனக்கூறியும், அரசு செவிசாய்க்க மறுப்பதால் அனைத்து தாலுகாக்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்க எண்ணியுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை