உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப வலியுறுத்தல்

 ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப வலியுறுத்தல்

மதுரை: மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர், அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை கமிஷனர் கலையரசியிடம் தமிழ்நாடு உயர் மேல்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். மாநில தலைவர் ஜெயக்குமார், பொதுச் செயலாளர் குமரேசன், துணை பொதுச் செயலாளர் மாயகிருஷ்ணன் ஆகியோர் அளித்த மனுவில், 'நடப்புக் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை உடன் நடத்த வேண்டும். உண்டு உறைவிடப் பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இணை இயக்குநர் அலுவலகத்தில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள கல்வி அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் இல்லை. அப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை