உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உத்தப்புரம் கோயில் வழிபாடு ஆலோசனை

உத்தப்புரம் கோயில் வழிபாடு ஆலோசனை

உசிலம்பட்டி : எழுமலை உத்தப்புரம் முத்தாலம்மன் கோயில் வழிபாடு செய்வதில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அமைதியான வழியில் கோயில் திருவிழா நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல், டி.எஸ்.பி., சந்திரசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பினரின் கருத்துக்களை தனித்தனியாக கேட்டறிந்தனர். கலெக்டரிடம் இது குறித்து அறிக்கை சமர்பித்து, அவரது வழிகாட்டுதல்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ