உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் வைகோ ஆவேசம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன் வைகோ ஆவேசம்

மேலுார்: டங்ஸ்டன் சுரங்க அனுமதியை ரத்து செய்யக்கோரி மேலுாரில் ம.தி.மு.க., சார்பில் நடந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு வரவேற்றார். எம்.எல்.ஏ., க்கள் பூமிநாதன், ரகுராமன், சதன் திருமலை குமார், பொதுச் செயலாளர்கள் ரொகையா, மல்லை சத்யா, மாநில பொருளாளர் செந்தில் அதிபன், அவை தலைவர் அர்ஜுன் சம்பத், தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் ராம உதயசூரியன் முன்னிலை வகித்தனர்.வைகோ பேசியதாவது: இப்பகுதியில் 2015 எக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அரிட்டாபட்டியில் குடைவரை கோயில், சமணர் படுகை, 2300 ஆண்டுகள் பழமையான தமிழ் எழுத்துக்கள், வற்றாத நீரூற்றுகள், மாநிலத்தின் முதல் பல்லுயிர் தலத்தை அழித்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன். ரத்து செய்யத் தவறினால் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திட்டம் வகுத்துள்ளேன் என்றார். மாவட்ட துணை செயலாளர் அழகர்சாமி, நகர் செயலாளர் முத்துப்பாண்டி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜன 04, 2025 19:05

தமிழகத்தில் மேலூர் பகுதியில் அமைந்துள்ள அரிட்டாட்டி சமண குகைகள் , மற்றும் அரிதான இலக்குகள் காப்பககங்கள் போன்றவற்றிற்கு போக மீதம் உள்ள பகுதியில் இருந்து மிக அரிதான டங்ஸ்டன் எடுக்கலாம். இதனால் மதுரை, மேலூர் மக்களுக்கு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் நன்கு அமையலாம் . திரு கோபால்சாமி ....முதலில் மேற்குதிடர்ச்சி மலையில் நியூட்ரினோ ஆய்வகம் கொண்டுவர எதிர்ப்பு சொன்னார்கள். திரு கோபால்ஸை என்ன சயின்டிஸ்ட்டா ??? தென் தமிழ்நாட்டிற்கு எந்த பெரிய தொழிலும் வரக்கூடாது என சொல்லுபவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்...


சமீபத்திய செய்தி