வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம்
உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், முறை கேடான பணிநியமன உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலு வலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி தாலுகா நாட்டாமங்கலம் வி.ஏ.ஓ., வாக ரஞ்சனி பணியில் இருந்த போது, கடந்த ஜன.,யில் மகப்பேறு விடுப்பில் சென்றார். இந்த காலிப்பணியிடத்தில் கஸ்துாரி என்பவரை உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் நிய மனம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் சுரேஷ், செயலாளர் செல்வ குமார், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், துணைச் செயலாளர் நவநீதராமன், வட்டாரத்தலைவர் செல்வம் உள்ளிட்டோர் ஜூலை 21ல், மகப்பேறு விடுப்பு எடுத்துச் சென்ற வரின் இடத்தை காலியிடமாக வைத்திருந்து விடுப்பு முடியும் போது, அவருக்கே வழங்க வேண்டும் என ஆர்.டி.ஓ., விடம் கோரிக்கை விடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தீர்வு கிடைக்காத நிலையில் மூன்றாவது நாளான நேற்று மாலை 6.00 மணியிலிருந்து ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.