உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காய்கறி பயிர்கள்: விவசாயிகள் தயக்கம்

காய்கறி பயிர்கள்: விவசாயிகள் தயக்கம்

பேரையூர்: பேரையூர் பகுதியில் காய்கறிகளுக்கு போதிய விலை இல்லாததால் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.தக்காளி, கத்தரி, வெண்டை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் இப்பகுதியில் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. சில வாரங்களாக காய்கறி விலை மிகவும் குறைவாக விற்பதால் காய்கறி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. வெண்டை, தக்காளி, கத்தரி பயிரிட்ட விவசாயிகள் பலர் தற்போது நிலங்களை தரிசாக போட்டு விட்டனர்.அவர்கள் கூறியதாவது: உழவு, உரம், மருந்தடித்தல் உள்ளிட்ட செலவுகள் அதிகம். காய்கறி விலை பறிப்பு கூலிக்கு கூட வரவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் காய்கறி விவசாயம் பார்ப்பது சவாலாக உள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி