உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூர் ரோடால் வாகனங்கள் அவதி

பேரையூர் ரோடால் வாகனங்கள் அவதி

பேரையூர்:பேரையூரில் இருந்து டி.கல்லுப்பட்டி செல்லும் சாலை சேதமாகி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஏழு கி.மீ., தொலைவுக்கு இச்சாலை அமைத்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக பெயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். டூவீலரில் செல்வோர் விழுந்து எழுந்து செல்வது வழக்கமாகிவிட்டது. இந்தச் சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் என்பதால் ஒரு சில இடங்களில் ரோடு மிக பள்ளமாகி விட்டது. சாலையை சீரமைக்க மாநில நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை