உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அழகர்கோவிலில் அன்னதானம் நீண்ட வரிசையில் காத்திருப்பு

அழகர்கோவிலில் அன்னதானம் நீண்ட வரிசையில் காத்திருப்பு

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் பகல்பத்து உற்ஸவம் துவங்கியுள்ளது. வாகனங்களிலும், மாட்டு வண்டியிலும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சோலைமலை முருகன், நுாபுர கங்கை ராக்காயி அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். டிச.26ல் நாள்முழுவதும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. தினமும் காலை 8:00 முதல் மாலை 6:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை 100 பேர் வீதம் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகளவில் குவிந்த பக்தர்கள் அன்னதானத்திற்காக உச்சி வெயிலினும் பாராமல் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்தனர். சிலர் கோயில் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பந்தல் அமைத்து கூடுதலான இருக்கைகள் அமைக்கவும், கூடுதலாக 100 பேர் வரை அனுமதிக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !