மதுரையில் பண்டரி நிறைவு
மதுரை: பகவந் நாம பிரச்சார மண்டலி சார்பில் 22 ஆம் ஆண்டு நாம சங்கீர்த்தனம் மேளா மதுரையில் பண்டரி என்ற தலைப்பில் 5 நாட்கள் நடந்தது. ஸ்ரீ ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்தார். ஸ்ரீ ராமானந்த பாரதி சுவாமிகள், மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் தலைமையில் சண்டி ேஹாமம், 108 சுமங்கலிகளுக்கு சுவாசினி பூஜை, தினமும் பாகவத மேளா, பஜனைகள் நடைபெற்றன. நிறைவு நாளில் முக்கிய நிகழ்ச்சியாக ராதா கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மணி கல்யாணம் நடந்தது. நலிவுற்றோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.