உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இருபோக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர்

இருபோக சாகுபடிக்கு இன்று முதல் தண்ணீர்

மதுரை : மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் நடந்த இருபோக சாகுபடி விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டத்தில் 2ம் போகத்திற்கு இன்று(டிச.18) முதல் தண்ணீர் திறப்பதென முடிவெடுக்கப்பட்டது.நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப் தலைமையில் நடந்த கூட்டத்தில் 150 விவசாயிகள் பங்கேற்றனர். அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் பேரணை முதல் மதுரையில் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்தில் 45 ஆயிரம் ஏக்கர் பயன்பெறுகிறது. 25ஆயிரம் ஏக்கர் கண்மாய் பாசனம் மூலமும் 20 ஆயிரம் ஏக்கர் நேரடி பாசனம் மூலம் சாகுபடியாகிறது. இரண்டாம் போக சாகுபடிக்காக நாளை (இன்று) காலை 6:00 மணி முதல் தொடர்ந்து 40 நாட்களுக்கு வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ