உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மகளிர் சுகாதார வளாகம் வேண்டும்

மகளிர் சுகாதார வளாகம் வேண்டும்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கீழப் பெருமாள்பட்டியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும்' என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த ஜோதி: இங்கு நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் கழிவறை வசதி இல்லை. இதனால் இப்பகுதி பெண்களும் திறந்த வெளியை பயன்படுத்துகிறோம். பகலில் திறந்தவெளியை பயன்படுத்த முடியாது. இரவில் நாய்கள், விஷ ஜந்துகள், போதை ஆசாமிகளால் சிரமம் அடைகிறோம். இப்பகுதியில் குளியல் தொட்டி வசதியுடன் மகளிர் சுகாதார வளாகம் அமைத்து தர ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை