உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையுடன் வரவேற்பா

குப்பையுடன் வரவேற்பா

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையின் பின்பக்க வாசலில் போதிய குப்பைத்தொட்டிகள் வைக்காததால் பாலிதீன் பைகளில் கட்டப்பட்ட குப்பை குவியல் காணப்படுகிறது. மருத்துவக் கழிவுகள் அல்லாத வார்டுகளில் சேரும் உணவு பாக்கெட், குடிநீர் பாட்டில், பிற கழிவுகள் நாள்தோறும் 5 டன் அளவில் சேகரமாகிறது. இவற்றை உடனுக்குடன் அகற்றினால் தான் மருத்துவமனை வளாகம் சுத்தமாக இருக்கும். 5 டன் குப்பை சேகரித்து வைக்கும் அளவிற்கு பெரிய குப்பைத்தொட்டிகள் வைக்கப்படவில்லை. சிறிய அளவிலான பிளாஸ்டிக் டப்பாக்களை மாநகராட்சி வைத்த நிலையில் குப்பை தேங்குவது அதிகரித்தது. தற்போது 6 தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 3 தொட்டிகளை மாநகராட்சியினர் எடுத்துச் சென்ற நிலையில் மூன்றில் மட்டும் குப்பை சேகரிக்கப்பட்டு மீதமுள்ள குப்பை, பாலிதீன் பைகளில் குவியலாக சேகரிக்கப்பட்டுள்ளது. அருகிலேயே மார்ச்சுவரி உள்ளதால், அங்கு வருபவர்கள் குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வாகனங்கள் கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. ஏற்கனவே இருந்தபடி 6 தொட்டிகளை வைக்க மாநகராட்சி முன்வரவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை