உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாட்டுக் கொட்டகையில் நடக்குது ரேஷன் கடை கட்டடம் கட்டியும் பயனில்லை

மாட்டுக் கொட்டகையில் நடக்குது ரேஷன் கடை கட்டடம் கட்டியும் பயனில்லை

அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே விட்டங்குளத்தில் 700க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இங்குள்ள ரேஷன் கடை பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாத வாடகை ஓட்டுக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதன் அருகே மாடுகள் கட்டப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இல்லாத சூழல் நிலவுகிறது. பொருட்களை இருப்பு வைக்க போதிய இடவசதியும் இல்லை. மழை நேரத்தில் ஊழியர்கள், பொருட்களை வாங்கிச் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். மழைநீர், கால்நடை கழிவுகளால் பொதுமக்கள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதனால் இப்பகுதியில் புதிய ரேஷன் கடை கட்ட வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் புதிதாக கடை கட்டி நான்கு மாதங்களாகிறது. இன்று வரை திறந்து பயன்பாட்டிற்கு வரவில்லை. கடையை திறக்க வலியுறுத்தியும் அதிகாரிகள் ஏனோ கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை