உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலைக்கு புறவழிச்சாலை வருவது எப்போது நகரில் நெரிசல் தீரும் அப்போது

உசிலைக்கு புறவழிச்சாலை வருவது எப்போது நகரில் நெரிசல் தீரும் அப்போது

உசிலம்பட்டி : உசிலம்பட்டி நகரில் புறவழிச்சாலை இல்லாததால் மதுரை - தேனி ரோடு, வத்தலக்குண்டு - பேரையூர் ரோட்டில் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. தேசிய நெடுஞ்சாலையான மதுரை --- தேனி ரோட்டில் உசிலம்பட்டி நகர் பகுதி மட்டும் குறுகலான ரோடுகளை கொண்டதாக இருக்கிறது. நகரின் கிழக்கு பகுதி துவங்கி உசிலம்பட்டி பழைய தாலுகா ஆபீஸ் வரையான ரோடு குறுகலாக இருக்கிறது. தற்போது பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகளும் நடக்கின்றன. பழைய பஸ்ஸ்டாண்ட் முன்பாக பஸ்களை நிறுத்திச் செல்கின்றனர். பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பிற வாகனங்களை நிறுத்துவதால், பஸ்சைரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல முற்படுகின்றனர். பேரையூர் ரோட்டில் இருபுறமும் கடைகளின் முன்பகுதி ஆக்கிரமிப்புகள், வாகனங்களை நிறுத்துவது போன்ற காரணங்களால் நகருக்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாட்டு பொருட்கள் வாங்க வந்த மக்களால் அடுத்தடுத்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஏதாவது ஒரு ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டாலும், அது நான்கு ரோடுகளிலும் நெரிசலை ஏற்படுத்துகிறது. இது தொடர்வதால் நகருக்கு புறவழிச்சாலை அவசியம் என கோரிக்கை விடுத்தனர். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உசிலம்பட்டி - மதுரை ரோட்டில் திருமங்கலம் விலக்கில் இருந்து புறவழிச்சாலைக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை மட்டுமே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விரைவில் புறவழிச்சாலை பணிகளை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

suresh Kumar 66 suresh Kumar 66
ஆக 30, 2025 05:40

உசிலம்பட்டி நகரில் புறவழிச்சாலை கொண்டு வர வேண்டும் கொண்டு வந்தால் இவன் நகருக்கு நன்மை கிடைக்கும் மக்கள் சந்தோஷப்படுவார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை