மேலும் செய்திகள்
தெருநாய்களால் அவதி
13-Dec-2025
சோழவந்தான்: டிச.26-: -: சோழவந்தான் அருகே தேனுார் சேம்பரில் தோண்டிய ரோட்டை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி யினர் கோரிக்கை விடுத்தனர். சமூக ஆர்வலர் கார்த்திகை குமரன் கூறியதாவது: ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் 'பைப்லைன்' அமைக்கும் பணி நடக்கிறது. இதற்காக தோண்டிய ரோடு சரியாக மூடப்படாமல் குண்டும் குழியுமாக காட்சி யளிக்கிறது. பாதி ரோடு முழுவதும் சரளை கற்கள் நிறைந்து கரடுமுரடாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஒருவழிப் பாதையில் செல்கின்றன. ஆபத்து வளைவான இப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும். இந்நிலையில் சரளைக் கற்கள் நிறைந்துள்ளதால் டூவீலரில் செல்வோர் விழுந்து காயமடைகின்றனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என்றார்.
13-Dec-2025